×

காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் : மெகுல் சோக்சி

மும்பை: தற்போது தனது உடல் நிலை மோசமாக உள்ளதால் 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வருவதற்கு சாத்தியம் இல்லை என வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழில் அதிபர் மெகுல் சோக்சி கூறியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னரே, வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறது. மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் வசித்து வருகிறார். அவரது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேலும், மெகுல் சோக்சியை, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டப்படி குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வசித்து வரும் நாடான ஆண்டிகுவாவின் சட்டம் இடம் கொடுக்காத காரணத்தால் சோக்சியை கைது செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் அவர் தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி சார்பில், அவரது வழக்கறிஞர் சய்சய் அப்போட் மற்றும் ராகுல் அகர்வால் ஆகியோர் நீதிபதி எம்எஸ் ஆஸ்மி முன் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்  கடனை திருப்பி செலுத்துவது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த தகவலை அமலாக்கத்துறை வேண்டுமென்றே மறைத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய எனது உடல்நிலை காரணமாக 41 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வர முடியாது. இந்த வழக்கை அதிகாரிகள் மெதுவாக, நடத்துகின்றனர். இதனால், விசாரணை துவங்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். எனவே காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என மெகுல் சோக்சி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial , mehul choksi, Video display, investigation,
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை